×

தும்மல் தீர தீர்வுகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

தூசியைத் தட்டும்போது, உதறும்போது, ஒட்டடை அடிக்கும்போது, மாசுபடிந்த சாலையைக் கடக்கும்போது தூசியின் காரணமாக தும்மல்வரும். உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் தூசுக்கள் காரமான உணவு, கிருமிகள் போன்றவை மூக்கின் வழியாக நுரையீரலுக்குள் செல்லும்போது, ஹிஸ்டமைன் என்ற தும்மல் சுரப்பியைத் தூண்டும். இதனால் தும்மலின்போது நீர்த்துளிகளும் வெளியேறும். இது உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுவதற்கான ஒரு செயல்தானே தவிர, நோய் கிடையாது.

தீர்வுகள்

தூசுக்கள் நிறைந்த இடத்திலிருந்து அகன்றுவிட வேண்டும்.
பனி, இளங்காலை நேரத்தில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு செல்லலாம். ஈரமான இடத்தில் நிற்பதை தவிர்க்க வேண்டும்.
மூக்கை பலமாக சிந்தக்கூடாது.

டாக்டர் பரிந்துரைக்காத எந்த மருந்துகளையும் மூக்கில் விடக்கூடாது. இதனால் மூக்கு அடைத்து விடக்கூடும். அடிக்கடி மூக்கினுள் கை வைப்பதை, மூக்குப்பொடி போடுவதை செய்யக்கூடாது. துணி முனையை சுருட்டி மூக்கினுள் நுழைத்து செயற்கையாகத் தும்மலை வரவழைக்கக் கூடாதுதும்மும்போது கைகளை மறைத்துக் கொண்டு தும்ம வேண்டும். வாயை திறந்து தும்மும்போது அருகில் இருப்பவர்களுக்கும் கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.சைனஸ் இருப்பவர்கள் சூடான தண்ணீரில் யூகலிப்டஸ் ஆயிலை போட்டு ஆவி பிடிக்கலாம்.

ஜலதோஷத்தால் தும்மல் எனில் மூக்கு சிந்தும்போது அடிக்கடி கைகளை கழுவிக் கொள்வது அவசியம்நார்ச்சத்து நிறைந்த பழங்கள், முளைக்கட்டிய பயறுகள், கீரைகள் சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யலாம்.மிதமான சூட்டில் சூப், ரசம், இஞ்சி, சுக்கு கஷாயம் என குடிக்க, சளி இளகி எளிதில் வெளியேறும். சுவாச மண்டலத்தை வலுப்படுத்த உதவும் பிராணாயாமம், மூச்சுப்பயிற்சி, யோகாசனப் பயிற்சிகள் நல்ல பலனைத் தரும்.

துளசிச்சாறு அல்லது தூதுவளைச்சாறு தினமும் 2 ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் சளி, இருமல், நெஞ்சு கபம் மூக்கில் நீர்வடிதல் போன்ற பிரச்னைகள் சரியாகும். மேலும் தினமும் இரண்டு துளசி இலையை மெல்லலாம். கற்பூரவள்ளிச் சாறுடன் சமஅளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால் மூக்கில் நீர் கொட்டுதல், தலைவலி குணமாகும். சளி, இருமல், ஆஸ்துமா, தொடர் தும்மல், சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் மூலிகை டீ, துளசி தேநீர், தூதுவளை சூப், எள்ளு லட்டு, முருங்கைக்கீரை அடை, வில்வசூப் என மூலிகை வைத்தியமாக சேர்த்துக் கொள்ள நல்ல நிவாரணம் பெறலாம்.

தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்

The post தும்மல் தீர தீர்வுகள்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED சிறுநீரகம் காப்போம்… சிறப்பாய் வாழ்வோம்!